செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (13:07 IST)

மெலிந்து போனதுக்கு காரணம் இது தான் - உண்மையை உடைத்த ரோபோ ஷங்கர் மனைவி!

நடிகர் ரோபோ ஷங்கர் அண்மையில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இது குறித்து அவரது மனைவி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 
 
அதில், எனது கணவர் குறித்து நிறைய வதந்திகள் பரப்புகிறார்கள், அவருக்கு எந்த நோயும் இல்லை. அவர் தற்போது நடித்து வரும் படத்திற்காக தான் உடல் எடையை குறைத்துள்ளார் என கூறியுள்ளார்.
 
காமெடி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் ரோபோ சங்கர் கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியால் பிரபலமானார். இதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார்.