1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2016 (11:24 IST)

என்னை ரவுடிப் பெண் என்றுதான் அழைப்பார்கள் - நிக்கி கல்ராணி பேட்டி

நிக்கி கல்ராணி மலையாளத்தில் நடித்த 1983, வெள்ளிமூங்கா படங்கள் ஹிட். தொடர்ந்து அவர் தமிழில் அறிமுகமான டார்லிங்கும் ஹிட். கடைசியாக வெளிவந்த, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்வரை நிக்கி கல்ராணி நடித்தப் படங்கள் அனைத்தும் முதலுக்கு மோசம் செய்யாதவை. ராசியான நடிகை என்ற முத்திரை காரணமாக படங்கள் குவிகிறது நிக்கி கல்ராணிக்கு...

 
எப்படி இவ்வளவு வாய்ப்புகள்...? 
 
இரண்டு நாயகிகளில் ஒருவர் என்றால் மற்ற நடிகைகள் நடிக்க யோசிப்பார்கள். நான் மற்றவர்கள் நடிக்க யோசிக்கும் பாத்திரங்களில்கூட  நடிக்கிறேன்.
 
தமிழில் பட வாய்ப்பு எப்படி உள்ளது?
 
தமிழ் சினிமாவில் எனது பயணம் நன்றாக இருக்கிறது. நான் நடித்த, கடவுள் இருக்கான்குமாரு படம் வருகிற 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மொட்டசிவா கெட்டசிவா, நெருப்புடா, கீ, ஹரஹர மகா தேவகி என்று வரிசையாக படங்கள் இருக்கு.
 
எந்தக் காட்சியில் நடிப்பது சிரமம்?
 
அப்படி எதுவுமில்லை. காதல் காட்சிகளில் நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.
 
உங்களுடன் நடித்தவர்களில் யார் பெஸ்ட்?
 
யார் சிறந்தவர் என்று தனியாக குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களில் பெஸ்ட். 
 
யார் ரோல் மாடல்?
 
என் ரோல்மடல் இவர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட முடியாது. 
 
படப்பிடிப்பு தளம் நீங்கள் வந்தால் கலகலப்பாகிவிடுமாமே?
 
படப்பிடிப்பு தளத்தில் நான் எப்போதும் கலகலப்பாக இருப்பேன். எல்லோரும் என்னை ரவுடிப்பெண் என்று தான் அழைப்பாளர்கள்.
 
ஜி.வி.பிரகாஷுடன் இரண்டாவதுமுறை இணைந்து நடித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி...?
 
ஜி.வி.பிரகாஷ் மிகவும் பயந்த சுவாபம் உள்ளவர். அமைதியாக இருப்பார்.
 
காதல்...?
 
காதல் உணர்வுப்பூர்வமானது. எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் வரும். அந்த நேரம் எனக்கு வரவில்லை. இப்போது நான் சினிமாவையும் என் குடும்பத்தையும் மட்டுமே காதலிக்கிறேன்.