செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (23:05 IST)

தமிழ்சினிமாவில் நடித்தால் சுதந்திரம் இருக்காது - பிரபல இயக்குனர்

vineeth seenivasan
மலையாள நடிகர் வினீத் சீனிவாசன் தமிழ் சினிமாவில் நடிப்பது சுதந்திரம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக பயணித்து வருபவர் வினித் சீனிவாசன். இவர் சென்னையில் படித்து வளர்ந்தவர். மலையாள சினிமாவில் நடித்தாலும்,சென்னையில்தான் வசித்து வருகிறார்.

இவர் இயக்கிய ஹிருதயம் மற்றும், முகுந்த உன்னி அசோசியேட்ஸ் உள்ளிட்ட படங்கள்  நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், மம்முட்டி , நிவின்பால் போன்று நீங்கள் ஏன் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தமிழில் நடித்தால் சுதந்திரம் பறிபோய்விடும் என்பதால் நடிக்கவில்லை; நான் மட்டுமல்ல  மோகன்லால் மற்றும் அவரது மகன் ஆகியோர் தமிழ் சினிமாவில் இந்த சுதந்திரம் பறிபோய்விடும் என்பதல்தான் அதிகப் படங்களில் நடிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj