எனக்கும் தனுஷூக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அனிருத்
தனுஷூக்கும் அனிருத்துக்கும் பிரச்சனை என்றும், அதனால் தான் கடந்த சில படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்றும் கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கள் தோன்றி வரும் நிலையில் தற்போது அனிருத் முதன்முதலாக அதை மறுத்துள்ளார்.
இப்போதும் நான் தனுஷூடன் பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன். எனக்கும் அவருக்கு பர்சனலாக எந்த பிரச்சனையும் இல்லை. 'விஐபி 2' படத்தில் கூட தீம் மியூசிக்கிற்காக எனது பெயரை பயன்படுத்தியுள்ளார். எங்களுக்குள் பிரச்சனை என்றால் எப்படி எனது பெயர் வரும்
எங்களுக்குள் ஒரு சின்ன இடைவெளி வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் சில படங்களில் பணிபுரியவில்லை. மீண்டும் விரைவில் பணிபுரிவோம், எங்களது கிசுகிசுக்களை பொய்யாக்குவோம்' என்று அனிருத் கூறியுள்ளார்.