1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (21:05 IST)

சினிமா கலைஞர் வீட்டில் திருட்டு

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரின் வீட்டில் நகை, பணம் திருட்டுப் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம்.  இவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படத்திற்கு முதல் தற்போதைய முன்னணி நடிகர்களின் படம் வரை ஏராளமான படங்களுக்கு சினிமா சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.

அதேபோல்,. சினிமாக் கலைஞர்களுக்கும் இவர் சண்டைப் பயிற்சிகள் அளித்துள்ளார். இவர் வீடு குடியாத்தத்தில் உள்ள நிலையில் இவரது வீட்டில் இருந்த அரைக்கிலோ வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் திருட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.