1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (15:01 IST)

தேம்பி அழுதபடி வீடியோ வெளியிட்ட நாகினி புகழ் மவுனிராய்

நாகினி சீரியல் ஹிந்தியில் வெற்றிபெற்றதையடுத்து தமிழில் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பட்டது. நாகினி  நாகம் அழகான பெண்ணாக உருவெடுத்து வந்து தன் பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் முடிவடைந்து விட்டதால் தனது ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளார்  மவுனிராய்.

 
 
தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த சீரியல் ரசிகர்களிடம் பெறும்  வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி லட்சக்கணக்கான ரசிகர்களை  கவர்ந்துள்ளது. தற்போது இந்த சீரியல் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
 
இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு கிண்டலாக கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளனர் நடிகர், நடிகையர்கள். நடிகை மவுனிராய்  பெரிய கண்களில் கண்ணீர் சிந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.