கன்னட அமைப்பின் போராட்டம் வாபஸால் பாகுபலி 2 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் முடிவு!
காவிரி விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் பேசிய பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் உள்ள கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார். மேலும் பாகுபலி 2 ரிலீஸாகும் தேதியில் மாநிலம் தழுவிய பந்த நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.
இதனால் பாகுபலி 2 ரிலீஸாவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய ஒத்துழையுங்கள் என்று இயக்குநர் ராஜமெளலி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் நேற்று சத்யராஜ் காவிரி விவகாரத்தில் 9 வரடங்கள் கழித்து தனது பேச்சு கன்னட மக்களை பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
இதனை தொடர்ந்து சத்யராஜின் மன்னிப்பை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதனால் பாகுபலி 2 படத்திற்கு எதிராக ஏப்ரல் 28ம் தேதி நடக்கவிருந்த போராட்டத்தை வாபஸ் பொறுகிறோம். இனி சத்யராஜ் கவனமாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் கன்னட அமைப்பின் போராட்டம் வாபஸ் ஆனதால் இப்படம் வெளியாவதில் ஏற்பட்டிருந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.