1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2020 (20:43 IST)

மகனுக்கு முடி வெட்டிவிட்ட ’’சிகரம் தொடு’’ பட இயக்குநர்!!!

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

உலகளவில் 8,59, 796 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில், அமெரிக்காவில் 189 618 பேர் பாதிப்படைந்துள்ளனர், 105,792 பேர் இத்தாலியில் பாதிக்கப்பட்டுள்ளனர், ஸ்பெயினீல்  95,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில், 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதனால் இந்தியாவில் அனைத்து தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மக்கள்  சலூன் கடைகளுக்குச் சென்று முடி வெட்ட முடியாத சூழல் உள்ளது.

இந்த நிலையில், தூங்காநகரம்  சிகரம் தொடு போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கவுரவ், தனது மகனுக்கு தானே முடி வெட்டி உள்ளார்.இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரல் ஆகி வருகிறது.