அஜித் படத்துக்கு ஆரம்பித்தது சிக்கல்
படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் அஜித் படத்துக்கு பஞ்சாயத்து வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விவேகம்’. அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இந்தப் படத்தில், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறார்.
இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில், அவருக்கு ஒரு போன் கால். சமீபத்தில் புத்தெழுச்சி பெற்ற திரைப்பட வர்த்தக சபையில் இருந்துதான் அந்த போன். “தனுஷ் நடித்த ‘தொடரி’ படத்துக்காக விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் நீங்கள் செட்டில் செய்ய வேண்டியிருக்கு. ஆபீஸுக்கு வாங்க, பேசி தீர்த்துக்கலாம்” என்றார்களாம்.
தியாகராஜனோ, விஷால் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். “இந்தப் பிரச்னையை நான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே தீர்த்துக்குறேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க” என்று சொல்லி போனைக் கட்செய்து விட்டாராம். படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ சாய் பாபா…