திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (19:32 IST)

அர்ஜூன் இயக்கும் படத்தை தொடங்கி வைத்த பவர் ஸ்டார்...

arjun
நடிகர் அர்ஜூன் இயக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் பவர் ஸ்டார்.

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் அர்ஜூன். இவர் ஷங்கரின் ஜென்டில்மேன், முதல்வன், ஜெய்ஹிந்த், குருதிப்புனல் உள்ளிட்ட பல ஹிட்படங்களில் நடித்தார்.

அஜித்தின் மங்காத்தா படத்திற்குப் பிறகு அவர் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த  நிலையில்,  நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா சில ஆண்டுகளுக்கு முன் விஷால் நடிப்பில் பட்டத்துயானை படத்தில் அறிமுகமாகியும் பெரிதாக படவாய்ப்புகள் அமையவில்லை.

இந் நிலையில், அர்ஜூன் தன் மகளை வைத்து, ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை இன்று பவர் ஸ்டார் பவன் கல்யாண் தொடங்கிவைத்தார். இப்படத்தின் ஹீரோவாக விஷ்வக் நடிப்பது குறிப்பிடத்தக்கது.