இறுதிகட்டத்தில் லெஜண்ட் அண்ணாச்சியின் இரண்டாவது படத்தின் ஷூட்டிங்!
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது.
இதையடுத்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்ன்ர் ரிலீஸான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்முலம் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார் இயக்குனர் துரை செந்தில்குமார்.
இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. சென்னையில் நடந்த ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது தூத்துக்குடியில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. விரைவில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.