வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (22:38 IST)

தி கோட் : விஜய் கேரளாவுக்கு செல்வது எப்போது?

GOAT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம்  தி கோட். இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தி கோட் படக்குழு கேரளாவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி,  கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை கோயிலுக்கு  நடிகர் பிரபுதேவா சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஆனால் தி கோட் பட ஷூட்டிங் அங்கு நடைபெறவில்லை எனவும், கேரளாவில் உள்ள பிரபல கிரீன் ஃபீல்ட் இன்டர்நேசனல் ஸ்டேடியத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இலங்கைக்கு சென்று சில  காட்சிகள் ஷூட்டிங் செய்ய படக்குழு திட்டமிட்ட நிலையில், இலங்கைக்குப் பதிலாக, கேரளாவில் ஷூட்டிங் நடப்பதாக தகவல் வெளியாகிறது.
 
ஏற்கனவே தி கோட் படக்குழு      கேரளாவுக்குச் சென்ற நிலையில், விஜய் வரும் வியாழக்கிழமை அன்று செல்லவுள்ளார். 

சமீபத்தில் வெங்கட்பிரபு இப்படத்தின் தரமான அப்டேட் வெளியாகும் என்று கூறிய  நிலையில், இப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.விஜய், யுவன் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.