1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj

கொரோனா சேவை; டிரைவராக மாறிய பிரபல நடிகர்

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

,இந்நிலையி தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரொனன பரவலைத் தடுக்க  இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் ஒருவர்  மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலஸ் டிரைவராக மாறி சேவை செய்து வருகிறார்.

யுவரத்னா , ருஸ்தம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர் நடிகர் அர்ஜூன் கவுடா. இவர்  புரோஜெக்ட் ஸ்மைல் டிரஸ்ட் என்ற அமைப்புடன் இணநிது கொரொனாவால் பாதித்த மக்களுக்குக்காக ஆம்புலன்ஸ் ஒட்டி வருகிறார்.

அவருக்கு எல்லா தரப்பு மக்களிடம் இருந்து ஆதரவும் பாராட்டும் குவிந்து வருகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது,  கர்நாடக மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.