திங்கள், 7 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (09:23 IST)

தன் ஒருவன் 2 படத்தில் இந்த பாலிவுட் நடிகர்தான் வில்லனா?

2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.