1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. அனேகமாக இந்த மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றே தெரிகிறது.



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெகுவிரைவில் வெளியாகும் என்ற செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லும் வரும் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
 
மேலும் இதே நாளில் சூர்யாவின் ரசிகர்களுக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன ஆச்சரியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.