சஞ்சய் நினைத்திருந்தால் 100 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கலாம்… தம்பி ராமையா பாராட்டு!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சஞ்சய் குறித்து பேசியுள்ள நடிகர் தம்பி ராமையா “சஞ்சய் இருக்கும் தோற்றத்துக்கு அவர் நினைத்திருந்தால் 100 கோடி ரூபாய் பட்ஜெட் உள்ள படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் இயக்குனர் ஆக வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். அவரை சந்தித்தபோது நான் பாராட்டினேன்” எனக் கூறியுள்ளார்.