1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (16:02 IST)

அதர்வாவின் தள்ளிப்போகாதே பட காதல் எமோஷனல் ப்ரோமோ இதோ!

அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகிய ‘தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டு கொண்டே வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரிலீஸ் டிசம்பர் 3ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. 
 
ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். கோபிசுந்தர் இசையில் உருவாகிய இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியா நிலையில் தற்போது " இதையா இதையா' என்ற எமோஷனல் வீடியோ பாடலின் ப்ரோமோ யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ...