செவ்வாய், 9 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (12:47 IST)

தளபதி 68 படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் இந்த நாட்டிலா?

விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. டிசம்பர் 31 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐதராபாத் ஷூட்டிங் இப்போது முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் இலங்கையில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  படத்துக்கு G.O.A.T. என்று தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.