1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (12:41 IST)

தளபதி 67 படத்தின் டைட்டில் இதுவா? அப்போ படம் பக்க மாஸ்!

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் மாநரகம் படத்தை இயக்கி அறிமுகமானார். தொடர்ந்து தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டார். 
 
இந்நிலையில் இரண்டாவது முறையாக நடிகை விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். 
இப்படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் இதன் டைட்டில் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. "குருதிப்புனல்"என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கமல் நடிப்பில் 1995ல் வெளியான படம் குருதிப்புனல். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பதால் இந்த டைட்டில் வைத்துள்ளதாக கோலிவுட்ல பேசப்பட்டு வருகிறது.