1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (15:23 IST)

தார் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் தல அஜித்

தார் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் தல அஜித்
தல அஜித் கடந்த சில நாட்களாக வட இந்திய சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் பைக்கில் அவர் சுற்றுப்பயணம் செய்துவரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் நேபாளம் உள்பட பல பகுதிகளுக்கு தல அஜித் சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் தற்போது அவர் தார் பாலைவனத்தில் சுற்றுப்பயணம் செய்து வருவதாக தெரிகிறது 
 
தார் பாலைவனத்தில் பைக்கை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு பைக்கில் சாய்ந்து கொண்டு தண்ணீர் குடிப்பது போன்ற அஜித்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது