செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 மே 2017 (12:04 IST)

பவர் ஸ்டார் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்: ரசிகர்கள் கொந்தளிப்பு!!

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் பவன் கல்யாண்.


 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு டுவிட்டரில் இணைந்தார் பவன் கல்யாண். அன்று முதல் தனது எந்த விதமான அறிவிப்புகளாக இருந்தாலும் அதை டிவிட்டரில் பதிவிட்டு வந்தார். 
 
பவன் கல்யாண் கிட்டதட்ட 2 மில்லியன் பாலோயர்ஸை பெற்றிருந்தார். இந்நிலையில், பவன் கல்யாணின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக ஜனசேனா கட்சியினர் அறிவித்துள்ளனர். 
 
முதலில் பவன் கல்யாணின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது என்று நினைத்தோம். ஆனால், சில விஷமிகளால் அவரது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.