புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (09:01 IST)

டாப்ஸி நடிப்பில் வெளியான சபாஷ் மிது படுதோல்வி… பயோபிக் படங்களின் மவுஸ் குறைகிறதா?

டாப்ஸி நடிப்பில் வெளியான சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வசூலை முதல் மூன்று நாட்களில் ஈட்டவில்லை.

இந்திய சினிமாவில் விளையாட்டில் சாதித்தவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியவர்களின் பயோபிக்குகள் இப்போது அதிகமாக உருவாகின்றன. அந்தவகையில் நடிகை டாப்ஸி தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படமான சம்பாது மித்து என்ற படத்தில் நடிக்க சம்மதித்தார்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிதாலி ராஜ் விளையாடிய நிலையில் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார்.. பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என சொல்லத்தக்க அளவுக்கு சாதனைகளைப் படைத்துள்ள அவரின் பயோபிக் படமான  ‘சபாஷ் மிது’ படம் கடந்த வாரம் வெளியானது.

வெளியானது முதல் பார்வையாளர்களை பெரியளவில் திரையரங்குக்குள் இழுக்கவில்லை. வார இறுதியைக் கடந்துள்ள இந்த திரைப்படம் 3 நாட்களில் சுமார் 1.5 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. தொடர்ந்து பயோபிக் படங்கள் வந்துகொண்டு இருந்த நிலையில் இப்போது அந்த படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்துள்ளதையே இந்த தோல்வி காட்டுகிறது. கடந்த ஆண்டு வெளியான 83 திரைப்படமும் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.