ஸ்டாலினுக்கு பாராட்டு விழா… வேலையை ஆரம்பித்த சினிமாக்காரர்கள்!

Last Updated: செவ்வாய், 4 மே 2021 (14:11 IST)
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு திரையுலகினர் சார்பாக பாராட்டு விழா அறிவிக்கப்படும் என திருப்பூர் சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாக்காரர்கள் எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களை பகைத்துக்கொள்ளாமல் அவர்களை தாஜா செய்து கொள்வதை வாடிக்கையாகக் கொள்வார்கள். அதற்கேற்றார்போல ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது அவருக்கு பாராட்டுவிழா என்றால் ஆட்சி மாறியதும் கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா என்று நடத்தி இரு கட்சிகளிடமும் நெருக்கமாக இருந்துகொள்வார்கள்.

இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஒன்றை விரைவில் நடத்த இருப்பதாக முன்னணி விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார். அதில் சினிமாவில் உள்ள எல்லா சங்கங்களும் கலந்துகொள்ளும் என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :