1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (12:50 IST)

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் நடிக்கும் தமன்னா

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் நடிக்கும் தமன்னா

சென்னை எக்ஸ்பிரஸ், இந்தி சிங்கம் போன்ற கமர்ஷியல் ஹிட்களை தந்த ரோஹித் ஷெட்டியின் அடுத்தப் படத்தில் தமன்னா நடிக்கிறார்.


 
 
தமன்னா நடித்த இரண்டு இந்திப் படங்களும் தோல்வியடைந்தாலும், பாகுபலி படத்தில் இளவரசிக்குரிய அழகுடனும், வீரத்துடனும் அவர் நடித்ததை இந்தித் திரைப்பட உலகினரை கவர்ந்தது. 
 
அதன் காரணமாக ரோஹித் ஷெட்டி அடுத்து ரன்வீர் சிங்கை வைத்து இயக்கும் புதிய படத்தில் தமன்னாவை நாயகியாக்கியிருக்கிறார். தமன்னா நடித்த தோழா படத்தின் இந்தி உரிமையை கரண் ஜோஹர் வாங்கியுள்ளார். 
 
தமிழில் தமன்னா நடித்த வேடத்தில் இந்தியிலும் அவரையே நடிக்க வைக்க கரண் திட்டமிட்டுள்ளார்.
 
ஆக, தமன்னா இந்தியில் மீண்டும் பிஸியாகப் போகிறார்.