தமன்னாவும் இப்போ வடசென்னை பொண்ணு

Sasikala| Last Modified திங்கள், 20 பிப்ரவரி 2017 (12:24 IST)
தமன்னாவின் கலருக்கு, மாடிவீட்டு மங்கையாகவே அவரை காட்ட முடியும். சீனு ராமசாமி துணிச்சலாக தர்மதுரையில்  தமன்னாவை மதுரைப் பெண்ணாக்கினார். வாலுப்பட இயக்குனர் விஜய் சந்தர் தமன்னாவை வடசென்னை பெண்ணாக்கியிருக்கிறார்.

 
தமிழ் சினிமாவில் மதுரை பீவரைப் போலவே வட சென்னை ஜுரமும் தகிக்கிறது. வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு  நிறைய படங்கள் வெளியாகின்றன. விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் கதைக்களமும் வடசென்னை என்று கூறப்படுகிறது. முக்கியமாக நாயகி தமன்னா இதில் வடசென்னை பெண்ணாக நடிக்கிறார்.
 
இந்தப் படத்தைப் பற்றி கூறுகையில், பாகுபலிக்குப் பிறகு என்னுடைய திறமைக்கு தீனி போடுகிற படம் என்று தமன்னா  சிலாகித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :