1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 11 மே 2017 (12:01 IST)

தல அஜித்தின் விவேகம் பட டீசரின் ரகசியம்!

சிறுத்தை சிவா -‘தல’ அஜித் கூட்டணி இணையும் மூன்றாவது திரைப்படமான ” விவேகம்” படத்தின் டீசர், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தெறிக்க  வைக்கும் வகையில் விவேகம் டீசர் அமைந்திருந்ததால், அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 
விவேகம் டீசர் வெளிவந்து பல சாதனைகளை படைத்தும், முறியடித்தும் வருகின்றது. இந்த டீசரில் அஜித் துரோகத்தால்  வீழ்த்தப்பட்டவர் போல் தெரிகிறார். அதை தொடர்ந்து அவர் அவர்களை பழிவாங்கும் கதை என தெரிகின்றது, இந்நிலையில் இந்த டீசரில் ஒரு விஷயத்தை சிவா மறைமுகமாக கூறியுள்ளார்.
 
இதில் வரும் மூன்று ஷாட்டில் சிவப்பு, வெள்ளை, பச்சை என இந்திய நாட்டின் தேசியக்கொடி நிறத்தை மறைமுகமாக காட்டியுள்ளனர். மேலும் 'விவேகம்' டீசர் 57 நொடிகள் ஓடும் வகையில் எடிட் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணத்தைவிவேகம்  படத்தின் எடிட்டரான லிவிங்ஸ்டன் அந்தோணி ரூபன் தெரிவித்துள்ளார். 
 
“விவேகம் திரைப்படம் அஜித் சாரின் 57-வது திரைப்படம். எனவே அதனை முன்னிட்டு விவேகம் டீசரை 57 நொடிகளுக்கு ஓடும்  வகையில் அமைக்குமாறு, டிவிட்டர் வாயிலாக ரசிகர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த வேண்டுகோள் எனக்கும்,சிவா சாருக்கும் பிடித்திருந்தது. எனவே டீசரை 57 நொடிகள் மட்டும் ஓடுமாறு தயார் செய்தோம்.” என எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.