திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 27 ஜூலை 2018 (18:04 IST)

விடுமுறைக்கு சென்றது குத்தமா? வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த டாப்ஸி

பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி, பேட்மிண்டன் வீரர் மேதிஸுடன் ரகசியமக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 
டாப்ஸி பேட்மிண்டன் வீரருடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது  கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தனது காதலர் குறித்தும் அவர் பற்றி வெளியான தகவல் குறித்தும் டாப்ஸி வாய்திறக்காமல் இருந்து வருகிறார். ஒலிம்பிக்கில்  வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் நெருக்கமாக அவர் பழகி வந்தார்.
 
இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார் டாப்ஸி. அங்கு மேதிஸும் வந்திருந்தார். எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ரகசியமாக நடந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கவே இவர்கள் கோவா சென்றதாக  கூறப்பட்டது.
 
இந்த செய்தி காலை முதல் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் இதற்கு நடிகை டாப்ஸி மறுப்பு தெரிவித்துள்ளார். குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்கவே கோவா சென்றதாக தெரிவித்துள்ளார்.