1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (10:13 IST)

ஜெய் பீம் படத்தின் வெற்றி…. விக்ரம் பிரபு படத்துக்கு கிடைக்கும் வெளிச்சம்!

ஜெய் பீம் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் நேற்றிரவு வெளியானது. வெளியாவதற்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு இருந்த இந்த திரைப்படம் இப்போது பல தரப்பினரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது ஜெய் பீம் திரைப்படமும் வெற்றியை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள தமிழ் கதாபாத்திரம் மக்களிடத்தில் பயங்கரமான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவர் ஒரு முன்னாள் போலிஸ் அதிகாரி ஆவர். இதே போன்ற போலிஸ் அராஜகத்தை மையப்படுத்தி அவர் இயக்கியுள்ள டாணாக்காரன் என்ற திரைப்படமும் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனால் அந்த படத்தின் மீது இப்போது அதிக வெளிச்சம் கிடைக்க ஆரம்பித்துள்ளது.