1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (07:01 IST)

பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதா? ரஜினி அரசியல் வருகை குறித்து டி.ராஜேந்தர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து 'போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்' என்று மறைமுகமாக கூறினார். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பது குறித்து பல அரசியல் தலைவர்களும் திரை நட்சத்திரங்களும் கருத்து கூறி வருகின்றனர்



 


இந்த நிலையில் இதுகுறித்து நேற்று டி.ராஜேந்தர் கூறியபோது, ', ’ஒரு திரைப்படம் வெளியில் வந்தால் தான் விமர்சனம் செய்ய முடியும். வெளியில் வராத படத்திற்கு எப்படி விமர்சனம் செய்ய முடியும்? முதலில் கல்யாணம். அப்புறம் சாந்தி கல்யாணம். அப்புறம் தான் பிள்ளை பிறக்கும். பிறக்காத பிள்ளைக்கு கருப்பா சிவப்பா என்று எப்படி பெயர் வைக்க முடியும்?’ என்று கூறினார்.

டி.ராஜேந்தரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் சமூக இணையதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் ரஜினி அரசியலுக்கு வந்து டி.ராஜேந்தருக்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.