1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (13:09 IST)

சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பை பற்ற சுசிகணேசன் படம்

சுசிகணேசனின் புதிய படம்  டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக தேர்வு செய்து திரையிடப்பட்டது.

தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டு பயலே, கந்தசாமி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசிகணேசன்.

இவர், இயக்கத்தில், ஊர்வசி ரவுத்தேலா, வினீத்குமார், அக்சய் ஓபராய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தில் ஹை கிரே. இப்படம் டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக தேர்வு செய்து திரையிடப்பட்டது.

இப்படம் பற்றி சுசிகணேசன், ‘’இப்படத்திற்காக உலக சினிமா பார்வையாளர்களிடம் இருந்து வரவேற்பும் பாராட்டுக்காக என் நன்றி….இப்படத்திற்கு நான் பட்ட கஷ்டம் கரைந்துபோய்விட்டது’’ எனத் தெரிவித்துள்ளார்.