ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (14:24 IST)

’சார்பாட்டா பரம்பரை’ படம் குறித்து சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை. ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பசுபதி, துஷாரா உள்பட பலர் நடித்து இருந்தனர் 
 
இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் குறித்து பேசாத திரையுலகினரே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் குறித்து கூறியிருப்பதாவது: 
 
சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத  கதையைக்  கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது! வாழ்த்துகள்!! என பதிவு செய்துள்ளார்.
 
முன்னதாக ’சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் சூர்யாதான் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும் அதன் பின் திடீரென அவர் விலகியதை அடுத்து ஆர்யா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது