வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (12:25 IST)

உக்ரைன் மக்களுக்காக கொஞ்சம் வேண்டிக்கலாம்! – ட்ரெய்லர் வெளியீட்டில் சூர்யா!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு இன்று நடந்த நிலையில் மேடையில் உக்ரைன் மக்களுக்காக வேண்டிக் கொள்ள சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ப்ரியங்கா மோகன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் மார்ச் 14ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சூர்யா “உக்ரைனிலிருந்து வரும் ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும்போது மனது பதைபதைக்கிறது. எல்லாரும் பாதுகாப்பாக தாயகம் திரும்ப சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்வோம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதன்பேரில் சில நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்துள்ளனர்.