1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (21:30 IST)

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது யார்? ஒரே ஒரு படம் இயக்கியவருக்கு வாய்ப்பா?

Surya
நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்பதற்கான தகவல் கசிந்ததை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் மற்றும் பரபரப்பு உருவாகியுள்ளது.
 
சூர்யா நடித்த 43வது திரைப்படம் 'கங்குவா' வரவிருக்கும் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதற்கிடையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 44வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
 
அடுத்ததாக, சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சூர்யாவின் 46வது படத்தை குறித்து முக்கிய விவரங்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, 'மூடர்கூடம்' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி வெளியான  இயக்குனர் நவீன் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. 
 
நவீன், 2013ஆம் ஆண்டு ஓவியா நடித்த 'மூடர்கூடம்' படத்தின் மூலம் பிரபலமானவர். மேலும், விஜய் ஆண்டனியின் 'அக்னி சிறகுகள்' என்ற திரைப்படத்தை இயக்கிய அவர், அதன் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. சூர்யாவின் 46வது படத்தை நவீன் இயக்குவாரா என்பது உறுதியாகவில்லையென்றாலும், இதுபற்றி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
 
Edited by Siva