1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (11:47 IST)

ரசிகர்களுக்கு தலா ரூ. 5, 000 - சத்தமின்றி சூர்யா செய்த உதவி!

தமிழ் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான சூர்யா தான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஏழை குழந்தைகளின் கல்வி உதவியாக அகரம் அறக்கட்டளை நடித்தி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிப்பதன் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை உதவி செய்து வருகிறார். 
 
தொடர்ந்து சமூக அக்கரையில் அதிக கவனம் செலுத்தி வரும் சூர்யா தற்போது இந்த கொரோனா இரண்டாவது அலையினால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தன் 250 ரசிகர்களுக்கு தலா 5000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். சூர்யாவின் இந்த உதவியை குறுந்செய்தி மூலம் அறிந்த ரசிகர்கள் இதனை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.