1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:55 IST)

சூர்யா பேனருக்கு தீ வைத்த நால்வர் மீது வழக்குப்பதிவு!

கடந்த சில நாட்களாக ஜெய்பீம் விவகாரம் சமூக தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சூர்யா பேனருக்கு தீ வைத்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்டப்பட்டு இருப்பதாக பாமக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை என்ற பகுதியில் சூர்யா பேனர்களை சமீபத்தில் ஒரு சிலர் தீ வைத்து எரித்துள்ளனர் 
 
இது குறித்து சூர்யா நற்பணி இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் ஜெய்பீம் படம் விஸ்வரூபம் எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது