திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (18:30 IST)

சாய்பல்லவியின் ‘கார்கி’ படத்தை ரிலீஸ் செய்யும் சூர்யா-ஜோதிகா!

kargi surya
சாய்பல்லவியின் ‘கார்கி’ படத்தை ரிலீஸ் செய்யும் சூர்யா-ஜோதிகா!
பிரபல நடிகை சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ என்ற திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இதுகுறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் சாய்பல்லவி உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். சூர்யா-ஜோதிகா சாய்பல்லவி உள்ளிட்டோர் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 ‘கார்கி’ படகுழுவினர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி என்றும் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் என்றும் அந்த கதாபாத்திரம் தான் ‘கார்கி’ என்றும் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்