1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (18:18 IST)

அடுத்த படத்தின் லுக்கா...? சூர்யாவில் தலைமுடி சீக்ரெட்!

சமீப காலமாக நீளமான தலைமுடியுடனே சூர்யா காணப்படுகிறார். எனவே இது குறித்து கேள்வி எழுப்பட்டது. 
 
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப்படம் வரும் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. இந்த படத்திற்காக ப்ரோமஷன் வேலைகளில் சூர்யா ஈடுப்பட்டுள்ளார். 
 
சமீப காலமாக நீளமான தலைமுடியுடனே சூர்யா காணப்படுகிறார். எனவே இது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், லாக்டவுன் சமயத்தில் தலைமுடியை வளர்த்தேன். கவுதம் மேனனுடனான என் அடுத்த படத்தில் இந்த ஹேர்ஸ்டைலில் தான் நடிக்க இருக்கிறேன். மேலும் இதே ஹேர்ஸ்டைலில் வேறு ஒரு இயக்குனரின் படத்திலும் நடிக்கிறேன் என்றார்.