ஆங்கில படத்தில் நடிக்கிறாரா சூர்யா? … லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.
இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சூர்யா அடுத்து கர்ணா என்ற பேன் இந்தியா படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது சூர்யா ஒரு ஆங்கில படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் வாடிவாசலுக்கு பின்னர் தொடங்கப்படுமா அல்லது அதற்கு முன்பே தொடங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.