புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (18:27 IST)

சிவகார்த்திகேயனின் பாடலை பல முறை கேட்ட சூப்பர் ஸ்டார் !

தெலுங்கு  சினிமாவின் சூப்பர் ஸ்டார்  பவன் கல்யாண்  செப்டம்பர் 2 ஆம்தேதி தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அப்போது ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அவரது அடுத்த சரித்திரப் படத்திற்கான போஸ்டர் வெளியானது. அவரது ரசிகர்கள் மில்லியனுக்கும் அதிகமான டூவீட்களைப் பதிவிட்டு டுரெண்ட் ஆக்கினர். சில விபத்துகள் நடந்தது.

இந்நிலையில் நடிகர் சிவகாந்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பவன் கல்யாணுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பவன் பல்யாண் திரு, சிவகார்த்திகேயன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி, உங்கள் ஊதா கலரு ரிப்பன் பாட்டை பலமுறை கேட்டிருக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.