திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (12:28 IST)

''குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சூப்பர் ஸ்டார்''… டுவிட்டரில் ஹேஸ்டேக் டிரெண்டிங் #BoxOfficeEmperorSSMB

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் ஒவ்வொரு அசைவும் அவரது ரசிகர்களுக்கு ஒரு தலைப்புச் செய்திதான்.

இவர் தற்போது சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்  கொரோனா ஊரடங்கு முடிந்து இவர் தனது மனைவி பிள்ளைகளுடன் சுற்றுலாவுக்குச் செல்வதற்காக விமானநிலையத்திற்குச் செல்வது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது ரசிகர்கள் இப்புகைப்படத்தைப் பதிவிட்டு #BoxOfficeEmperorSSMB என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.