சன்னி லியோன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 18ஆம் தேதி வெளியீடு
சன்னி லியோன் நடித்துள்ள ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 18ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
ஆபாசப்பட நடிகையான சன்னி லியோன், தற்போது அதை விட்டுவிட்டு நல்ல நல்ல படங்களாகத் தேடி நடித்து வருகிறார். அந்த வகையில், பெண்ணை மையப்படுத்திய ‘வீரமாதேவி’ படத்தில் அவர் நடித்துள்ளார். வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இந்தப் படத்துக்காக, வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நடித்திருக்கிறார் சன்னி.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துக்காக மட்டும் 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி லியோன். 70 நிமிட வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 18ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.