வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (14:19 IST)

ரிங்க ரிங்கா ரோசசு... சுனிதாவுக்கு Gap'ல உம்மா கொடுத்த Partner -வீடியோ!

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகாய் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்தார். தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்த இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்து மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
 
இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தமிழ் மக்களிடையே பெரும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் தற்போது ஆண் ஒருவருடன் ரிங்க ரிங்கா ரோசசு பாடலுக்கு நெருக்கமாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.