ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (20:43 IST)

ஓவியாவுக்காக சுந்தர்.சி எடுத்த துணிச்சலான முடிவு!!

ஓவியாவுக்கு ஏகப்பட்ட புகழ் சேர்ந்திருப்பதால், அவரை வைத்து ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி.


 
 
சுந்தர்.சி இயக்கத்தில், விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படம் காமெடியாக இருந்ததால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
 
தற்போது ‘சங்கமித்ரா’ படத்தின் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் சுந்தர்.சி. ஆனால், ஹீரோயின் கிடைக்காமல் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. எனவே, அருமையான திட்டமொன்றைத் தீட்டியுள்ளார் சுந்தர்.சி.

‘பிக் பாஸ்’ மூலம் ஓவியாவுக்கு ஏகப்பட்ட புகழ் கிடைத்துள்ளதால், அவர் நடித்த ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் என்கிறார்கள். அந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட்டையும் அவர் எழுதி முடித்துவிட்டாராம்.
 
‘மெர்சல்’ படம் ஏகப்பட்ட பணத்தை விழுங்கியிருப்பதால், ‘சங்கமித்ரா’வை தயாரிப்பதாகச் சொன்ன தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கும் பணச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

எனவே, ‘சங்கமித்ரா’வைக் கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு, ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். விரைவில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள்.