1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2017 (22:44 IST)

கடன் கொடுத்தவர் திருப்பி கேட்கத்தான் செய்வார்! அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசிய சுந்தர் சி

ஒருபக்கம் நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார், அன்புச்செழியனின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இன்னொரு பக்கம் அன்புச்செழியனுக்கு காண்டாக்ட் சர்டிபிகேட் கொடுக்கும் முயற்சியில் சில திரையுலகினர் ஈடுபட்டு வருகின்றனர்.





ஏற்கனவே அன்புச்செழியன் உத்தமர், நல்லவர் ,வல்லவர் என சீனுராமசாமி, விஜய் ஆண்டனி, தேவயானி ஆகியோர் கூறியிருக்கும் நிலையில் இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. தன்னுடைய அனைத்து படங்களுக்கும் அன்புச்செழியன் தான் பைனான்ஸ் செய்துள்ளதாகவும், தன்னிடம் ஒருமுறை கூட அவர் கடிந்து கடனை திருப்பி கேட்டதில்லை என்றும் கூறினார்.

ஒருசில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் திட்டமிடாமல் படத்தை உருவாக்க முயன்று பின்னர் வட்டியும் அசலும் கட்டமுடியாமல் திணறுவதாகவும், இதற்கு பைனான்சியரை குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் சுந்தர் சி கூறியுள்ளார். 'இரவல் கொடுத்தவன் கேட்கின்றான், அவன் இல்லையென்றால் விடுவானா? என்ற பழைய பாடல் போன்று கடன் கொடுத்தவர் திருப்பி கேட்கத்தான் செய்வார், கடனை திருப்பி கேட்பவரை மோசடிக்காரர் என்று கூறுவதில் எந்த விதத்தில் நியாயம்? என்றும் சுந்தர் சி கேள்வி எழுப்பியுள்ளார்.