1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (13:53 IST)

கையில் வாளுடன் கிளம்பும் சூர்யா… சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புகைப்படம்!

நடிகர் சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதன் போஸ்டர் ஒன்றை சன்பிக்ஸர்ஸ் வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஆனால் அதற்கு முன்பாகவே சர்ப்ரைஸாக சூர்யா கையில் வாளுடன் நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.