1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (11:54 IST)

ரஜினி ஒரு ஊழல் நடிகர் - சுப்பிரமணிய சுவாமி காட்டம்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஊழல் நடிகர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். 


 

 
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடும் போது, வழக்கம்போல் “ இன்று நான் நடிகன். நாளை நான் யார் என்பதை கடவுள் முடிவு செய்வார்” என தனது டிரேட்மார்க் கருத்தை தெரிவித்தார். மேலும், நான் அரசியலுக்கு வந்தால் சிலரை பக்கத்தில் அண்ட விட மாட்டேன் என கூறியிருந்தார். இதனால், அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி “ரஜினி ஒரு ஊழல் நடிகர். அவருக்கு அரசியல் அறிவு சிறிதும் கிடையாது. எனவே அரசியலுக்கு வரவோ, முதல்வராக அமரவோ சிறிதும் தகுதியில்லை. அதேபோல், அவர் தமிழர் இல்லை என நான் ஒரு போதும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் மராட்டியர் என திமுகதான் பிரச்சனை கிளப்பியது” என பேசியுள்ளார்.