வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (23:27 IST)

சூப்பர் ஸ்டாரின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்...மேலும் மூவருக்கு சவால் !

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சமீபத்தில் தளபதி விஜய்க்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் ஒன்றை விடுத்தார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த சேலஞ்சை தளபதி விஜய் அவர்கள் ஏற்று நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

சற்றுமுன் தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று செடிகளை நட்டு, இதுகுறித்த குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். அவரே மண்வெட்டியால் குழி தோண்டி செடிகளை நட்ட இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 

மேலும் மகேஷ் பாபு தனது நன்றியை தெரிவித்துள்ள தளபதி விஜய் கிரீன் இந்தியா சேலஞ்சை அனைவரும் நிறைவேற்றினால் அனைவருக்கும் நல்லது என்றும், அனைவருக்கும் சுகாதாரமானது என்று குறிப்பிட்டு உள்ளார்

தளபதி விஜய்யை அடுத்து ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜூனியர் என்டிஆர் எப்போது இந்த சேலஞ்சை நிறைவேற்றுவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இந்நிலையில்,  ஸ்ருதிஹாசன் தன் வீட்டில் மரக்கன்று நட்டுவைத்துள்ளார். இதையடுத்து அவர் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோசன், ராணா டகுபதி, தமன்னா ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.