1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (16:13 IST)

பிக் பாஸ் வீட்டில் நுழைய இருக்கும் ஸ்ரீபிரியா?: காரணம் என்ன தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் நுழைய இருக்கும் ஸ்ரீபிரியா?: காரணம் என்ன தெரியுமா?

நடிகர் கமல் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து அந்த நிகழ்ச்சி குறித்து பலரும் தினமும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். அதிலும் நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக பெரும்பாலான கருத்துக்கள் வருகின்றன.


 
 
ஓவியாவுக்கு உள்ள ஆதரவும் அன்பும் யாருமே எதிர்பாராத ஒன்று. அந்த அளவுக்கு ஓவியா பைத்தியம் பிடித்து பலரும் இருக்கின்றனர். இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் ஓவியாவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
 
குறிப்பாக பிரபல நடிகை ஸ்ரீபிரியா ஆரம்பம் முதலே ஓவியாவுக்கு தீவிர ஆதரவு அளித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களாக ஓவியா ஆரவ் காதல் விவகாரத்தில் ஓவியா சற்று தடம் மாறியுள்ளது போல தோன்றுகிறது. இதனை தடுக்க ஓவியாவின் நலம் விரும்பியாக உள்ள நடிகை ஸ்ரீபிரியா பிக் பாஸ் வீட்டில் செல்ல விரும்புவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
 
வெளியில் உள்ள மக்கள் ஓவியா மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். ஓவியாவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பதை வீட்டில் உள்ள ஓவியா அறிந்துகொள்ள முடியாது. எனவே அதனை ஓவியாவுக்கு தெரியப்படுத்த ஸ்ரீபிரிய விரும்புகிறார்.

 
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று ஓவியாவுக்கு வெளியே உள்ள ஆதரவு மற்றும் அன்பை பற்றி சீக்கிரமாக சொல்லி ஆரவை தைரியமாக உதரித்தள்ளிவிட்டு ஜாலியாக இருந்து வெற்றிபெற சொல்லிவிட்டு வர விரும்புகிறேன். மற்றவர்கள் பொறாமைப்படட்டும் என கூறியுள்ளார். ஆனால் அதற்கு பிக் பாஸ் அனுமதிக்கனுமே மேடம்.