1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (11:08 IST)

ஜூலியின் சிரிப்பை கழுவி ஊற்றும் பிரபல நடிகை!

ஜூலியின் சிரிப்பை கழுவி ஊற்றும் பிரபல நடிகை!

தமிழகம் முழுவதும் ஒரே பேச்சாக இருப்பது பிக் பாஸ் தான். இதனை திரை நட்சத்திரங்களும் பார்த்து வருகின்றனர். தினமும் நிகழ்ச்சி குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் அவர்கள். இதில் பெரிதும் விமர்சிக்கப்படுபவர் ஜூலி.


 
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஜூலிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் ஓரளவு அனுதாபங்கள் கிடைத்தது. ஆனால் தற்போது ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் சம்பாதித்துள்ளார் அவர். ஆனால் ஒட்டுமொத்த ஆதரவையும் அன்பையும் பெற்றுள்ளார் ஓவியா.
 
இந்நிலையில் ஜூலியின் சிரிப்பை பிரபல நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கழுவி ஊற்றியுள்ளார். மேலும் நடிகை மீஷா கோஷலும் ஜூலியை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
அவுங்க மட்டும் தான் திட்டம் போடுவாங்களா? நாமும் போடுவோம். ஓவியாவை எப்போதும் காப்பாற்றுவோம் அந்த புளுகு மூட்டையை வெளியே அனுப்புவோம். ஊருக்கு போய் சேரு ஆத்தா என தனது ஒரு டுவீட்டில் தெரிவித்துள்ளார் ஸ்ரீபிரியா.
 
மற்றொரு டுவீட்டில், யாரு சிரிக்கிறத பார்த்தும் நான் பயந்தது இல்லை. இது தான் முதல் தடவை! இதுல சில்லாக்ஸ்னு பாட்டு வேற... மந்திரிச்சுக்க போறேன் என ஜூலியின் சிரிப்பை கழுவி ஊற்றியுள்ளார் ஸ்ரீபிரியா.
 
இந்நிலையில் நடிகை மீஷா கோஷல் தனது டுவீட்டில், அது என்ன வேற மாதிரி கோவம் ஜூலி? உன்னை பார்த்தா தான் மொத்த தமிழ்நாட்டுக்கே கோவம் வருது. அதனால தயவு செய்து உன் கோவத்தை மூடு. அப்புறம் தயவு செய்து பாடுவதை நிறுத்து என கூறியுள்ளார்.