1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (13:49 IST)

ஒன்னு பத்தாது ; அஞ்சு வேணும் : கேட்கும்போதே தலை சுத்துது!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பிரபல இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தெலுங்கு திரையுலகை அதிரவிட்டார். 

 
அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் குற்றச்சாட்டை வைத்தார். இவரது குற்றச்சாட்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பலரும் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
தற்போது சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்ட ஸ்ரீரெட்டி. மேலும், அவரது வாழ்க்கையை மையமாக கொண்ட சினிமாவிலும் நடிக்க இருக்கிறார். அலாவுதீன் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ரெட்டி டைரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பல பிரபலங்களின் உண்மை முகம் காட்டப்படும் என்பதால் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் “ஒரு திரைப்படத்தில் என் வாழ்க்கை வரலாற்றை கூற முடியாது. குறைந்தது 5 திரைப்படங்களாவது எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.